சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக  கண்ணாடி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்ட 2012ம் ஆண்டில் ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் இதுவரை  மேற்கூரைகள் இடிந்து விழுதல். தானியங்கி கண்ணாடி கதவு உடைதல் என 75 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு சம்பவங்களில் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் 76-வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4-வது நுழைவுவாயில் அருகே கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக கண்ணாடி நொறுங்கி விழும் சம்பவம் நடைபெற்று வருவதால் மக்கள் விமான நிலையத்திற்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *