களமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்….

பிஎஸ்என்எல் நிறுவனம் சில கால இடைவெளியில் சலுகைகள் வழங்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தனது 8 ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.109 திட்டம்:
ரூ.109 ரீசார்ஜ் மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும். 1536 எம்பி அளவிலான 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்:
ரூ.198 ரீசார்ஜ் 1 ஜிபி தினசரி டேட்டா, 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.291 திட்டம்:
ரூ.291 ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை 25 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.333 திட்டம்:
ட்ரிபிள் ஏஸ் திட்டம் என்று அழைக்கப்படும் இது தினசரி 1.5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது 41 நாட்கள் செல்லுபடியாகும்.
பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:
ரூ.444 என்கிற டேட்டா ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற இணைய தரவை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக இண்டர்நெட் வரம்பை கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.549 திட்டம்:
ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம், 60 நாட்களுக்கு செல்லுபடியகும். நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் ரூ.561 திட்டம்:
ரூ.561 ரீசார்ஜ், தினசரி 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.821 திட்டம்:
ரூ.821 திட்டம் மொத்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *