Site icon News – IndiaClicks

தவளைக்காக டேட்டிங் வெப்சைட் துவங்கிய தேசிய வரலாற்று மியூசியம்

tamil.neew.co.in-musium 3
பொலிவியாவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அரிய தவளையை பாதுக்காக்க டேட்டிங் வெப்சைட் ஒன்றை துவங்கியுள்ளது.
பொலிவியா உள்ள பிரபல அருங்காட்சியங்களில் ஒன்றான தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அரிய வகை தவளை ஒன்றுக்கு டேட்டிங் வெப்சைட் துவங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தவளை அதன் இனத்தின் கடைசி உயிரினமாகும். இன்னும் 5 வருடத்தில் இந்த தவளை இறந்துவிடும் என்பதால் அதன் இனத்தை பாதுகாக்க தற்போது அதற்கு ஜோடி ஒன்றை தேட தொடங்கியுள்ளனர்.
இந்த தவளையின் பெயர் ரோமியோ. தவளை தன் தன்மையின் ஏக்கம் குறித்தும், தன்னுடைய முக்கியத்துவம் குறித்தும் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்காக நிதி திரட்டப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறையே நபர்கள் பணம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிதி பல்வேறு காடுகளுக்கு சென்று ரோமியோவுக்கு ஜோடியை தேட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.