150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse  என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.

இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *