டெபாசிட் பணத்தை பாதுகாக்க கூடுதல் கட்டணம்? வங்கிகள் கறார்!!

நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதா விரைவில் அமலுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்நிலையில், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை பாதுகாக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி டெபாசிட் திட்டங்கள் மீது தற்போது கடன் உத்தரவாதக கூட்டுஸ்தாபன சட்டம், 1961-ன் கீழ் ரூ.1 லட்சம் வரையில் உள்ள பணத்திற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால், வங்கி திவாலாகும் போது அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் மத்திய அரசோ, காப்பீடு பணத்தினை உயர்த்தி தருவதாகவும் இது 25 வருடத்திற்கு பிறகு ஏற்படும் பெரிய மாற்றம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், எப்ஆர்டிஐ மசோதாவால் காப்பீட்டு தொகையினை 12 மடங்கு உயர்த்தி, 90 சதவீதம் வரையிலான வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 பைசா காப்பீடு என வங்கிகள் செலவு செய்கின்றன. இதுவே மத்திய அரசின் திட்டப்படி ரூ.1 லட்சம் ரூபாயாக உள்ள காப்பீடு தொகையினை 15 லட்சமாக உயர்த்தினால் வங்கிகளுக்கு பிரீமியம் தொகையில் கூடுதல் செலவுகள் ஆகும்.

அப்போது வங்கிகள் இந்த கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது தள்ள வாய்ப்புள்ளது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து காப்பீடு ப்ரீமியம் தொகையினை பெற்றால் தற்போது பெற்று வருவதை விட மேலும் லாபம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *