அபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்?

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் தெளிவாக பூமியில் இருப்பவர்களுக்கு தெரியும் வகையில் வரும். அதில் பலவும் பூமத்திய ரேகைக்கு வடக்கே அல்லது தெற்கே வெவ்வேறு பாதைகளில் தெரியும். நாமும் பெரும்பாலும் செய்தி சேனல்கள், பத்திரிக்கைகளில் அவை தெரிந்த செய்தி படங்களை பாப்போம். இந்த 2017 ஆகஸ்ட் 21ம் தேதி கூட ஒரு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் மட்டும் தெரிய உள்ளது. நாசா இதுக்காக பல கிராபிக்ஸ் காணொளிகளை இணையத்தில் தெளிவாக வெளியிட்டுள்ளது. எந்தெந்த ஊரில் நிலவின் நிழல் தெளிவாக விழும் எனதெரிவித்துள்ளார்கள் .

தமிழ்நாட்டில் அதுவும், கோயமுத்தூர் , மதுரை, ஆகிய ஊர்களிலும் முழு சூரிய கிரகணம் தெரிய உள்ளது.
சவூதி அரேபியாவில் ரியாத்இல் ஆரம்பித்து , அபுதாபி, மஸ்கட்
பின்னர்., மங்களூரு ,
கோயமுத்தூர்
ஈரோடு,
திருச்சி
பழனி
திண்டுக்கல்
மதுரை
காரைக்குடி,
புதுக்கோட்டை
ராமேஸ்வரம்
ஈழத்தில் , திரிகோணமலை வரை,
சிங்கப்பூர்

இந்தோனேசியா என முடியவுள்ளது.

டிசம்பர் 26 – 2019 அன்று மிக தெளிவான முழு சூரிய கிரகணம் தெரியும்.

மேல உள்ள ஊர்களில் நீங்கள் வசித்தால் அன்று மேகமூட்டமாக இருக்கக்கூடாது என நினைத்துக்கொள்ளுங்கள். வெறும் கண்ணில் சூரியனை பார்க்கவேண்டாம். கண் அவிந்துவிடும்.

 

​2018இல் முழு சந்திரகிரகணமும் தெரிய உள்ளது. அதையும் இந்த பக்கத்தில் காணலாம். ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *