Site icon News – IndiaClicks

சென்னையில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம்: பீதியில் மக்கள்!

tamil.neew.co.in-suranga pathai
சென்னை அண்ணாசாலையில் 40 அடி நீளத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.
மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சென்னை அண்ணாசாலை அருகே நிறைவடைந்தது. இந்நிலையில் எழும்பூர் முதல் நேரு பூங்கா இடையே உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ சுரங்க ரயில் சோதனை நடைபெற்றது இன்று நடைபெற்றது.
இந்த மெட்ரோ சுரங்க ரயில் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனை உடனடியாக ஆய்வு செய்யுமாறு சென்னை ஆட்சியர் மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆய்விற்கு பின்னரே திடீர் பள்ளத்துக்கு காரணம் தெரியவரும். சில மாதங்களுக்கு முன்னரும் அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது