Site icon News – IndiaClicks

ஏர்டெல் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு

tamil.neew.co.in-airtel
இலவச 4ஜி இணையதள வசதி மற்றும் வாய்ஸ் கால் சேவைகள் மூலம் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் முன்னேறியது. இதனால் ஏர்டெல் சரிவை கண்டது. தற்போது அந்த சரிவில் இருந்த மீள பல சலுகைகளை வழங்கிவருகிறது.
கடந்த ஆண்டு ஏர்டெல், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.799 திட்டத்தில் இனி தினமும் 3.5 ஜிபி 3ஜி/ 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இதே கட்டணத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் ஜியோவின் ரூ.799 திட்டத்திற்கு நேரடி போட்டியாக அமைந்தது. ரூ.799 திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்த போது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை வழங்குவதாக அறிவித்தது. பின்னர், அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஜியோ வழங்கும் ரூ.799 திட்டததில் தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், ஏர்டெல் 3.5 ஜிபி வழங்குவததோடு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. ஏர்டெல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும்