Site icon News – IndiaClicks

உலகப்போர் வெடிகுண்டு; மூடப்பட்ட விமான நிலையம்: லண்டனில் பரபரப்பு!

tamil.neew.co.in-london airport

எப்போதும் பரபரப்பாக இருக்கும் லண்டன் நகர விமான நிலையம் முன் அறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டது. இதற்கான காரணம் 2 ஆம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு அங்கு கண்டெடுக்கப்பட்டது.

தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மர்ம பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் மேற்கொண்ட சோதனையில், அந்த மர்ம பொருள் 2 ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது தெரியவந்தது.
இதனால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி விமானம் புறப்பட்டுச் செல்லவும், தரையிறங்கவும் தடைவிதிக்கப்பட்டது. பயணிகல் வெளியேற்றப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, லண்டன் மாநகர போலீஸாரின் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டை செயல் இழக்கும் பணிகள் நடந்து வருகின்றன.