Site icon News – IndiaClicks

நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமானம்: தனியாரிடம் விற்கபடுகிறதா?

tamil.neew.co.in-air india
அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதால் அதை தனியார் மயமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
ஏர் எசியா மற்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் எந்த தனியார் நிறுவனத்துக்கு விற்கப்படும் என்ற தகவல் தெரியவரும்.