பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயமா? அரசின் அறிவிப்பால் கொந்தளிப்பு
பாஜக ஆட்சி மத்தியில் ஏற்பட்டதில் இருந்தே மத சம்பந்தமான விஷயங்கள் பள்ளி மாணவர்களிடம் புகுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹரியானா மாநிலத்தில் கீதை ஸ்லோகங்கள் பள்ளி சிலபஸ்களில் இணைக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தற்போது பள்ளி பிரார்த்தனைகளில் காயத்ரி மந்திரம் பயன்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியானா மாநில கல்வி அமைச்சர் ஆர்.பி.ஷர்மா கூறுகையில், ‘காயத்ரி மந்திரம் நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் உலகிற்கு அளித்த நன்கொடை. ஹரியானா பள்ளிகளில் காலை பிரார்த்தனைகளில் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பிற மதத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது