Site icon News – IndiaClicks

அசாமில் லேசான நில நடுக்கம்; பொதுமக்கள் பீதி

tamil.neew.co.in -earth quake
அசாம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவாக பதிவாகியுள்ளது. இந்த திடீர் நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.
இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் திரண்டனர். கடும் குளிரிலும் மக்கள் தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் ஏற்படவில்லை. அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பூட்டானிலும் நில அதிர்வு உணரப்பட்டது.