Site icon News – IndiaClicks

சிரியாவில் உள்நாட்டு போர்- 400 பேர் பலி

tamil.neew.co.in-war
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா அரசு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷ்யா படைகளின் ஆதரவுடன் சிரியா அரசு போர் செய்து வருகிறது. இதனால் சிரியா நாடே போர்களமாக காட்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் மொத்தம் 85 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 5 நாள் முடிவில் 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை விடுவிப்பதற்குத்தான் தாக்குதல் நடைபெறுவதாக சிரியா அரசு கூறுகிறது.