Site icon News – IndiaClicks

உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ்எக்ஸ்(Space X) நிறுவனம்

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனம் உலகிலேயே சக்தி வாய்ந்த ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.
நாசா விண்வெளி துறையில் பல சாதனைகளை செய்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ, சீனா, ரஷ்யா உள்பட பல உலக நாடுகள் விண்வெளி துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
வெளியே தெரியாத சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் சாதனைகள் செய்து வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை இன்று விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது.  27 இன்ஜின்களைக் கொண்ட இந்த ராக்கெட் 70 மீட்டர் உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடையதாகும்.
இந்த ராக்கெட்டின் பெயர் ‘ஃபால்கன் ஹெவி’. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனரவால் விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல நவீன யுக்திகளை கையாண்டு வருவதால் இதன் அடுத்தகட்ட திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.