Site icon News – IndiaClicks

போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து மின் ஊழியர்களும் ஸ்டிரைக்?

tamil.neew.co.in-tneb
போக்குவரத்து உழியர்களை தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு போருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. இதனால் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருகிறது. விருதாச்சலம் அருகே அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது மின்சார வாரிய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.  வரும் 23ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.