வீட்டுக்கு போங்க: மோடிக்கு ராகுல் எச்சரிக்கை
புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிரதமர் மோடி இடத்தை காலி செய்ய வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கை:
காஸ் விலை அதிகரித்துள்ளது, ரேசன் பொருள் விலை அதிகரித்துள்ளது. உங்களின் பொய் பேச்சை நிறுத்தி கொள்ளுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள். அல்லது இடத்தை காலி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.