துளசி பொடி
பயன்கள்:
துளசியின் மனமே நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாம் தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகி நோய் நம்மை தாக்காது.
உடல் உஷ்ணம் மிகுந்தவர்க்கும் உடல் உஷ்ணம் குறைந்தவர்களுக்கும் துளசி நல்ல பலனைத் தருகிறது. துளசி சளியை குறைக்கிறது. சுக்கு, திப்பில், மிளகு என்ற திரிகடுகு கஷாயத்தில் ஒரு பிடி துளசியை போட்டு அருந்தி வந்தால் சளி, இரும்பல் போன்றவை அண்டாது.
சிலருக்கு நாக்கில் ருசியற்ற தன்மையும் கொழ கொழப்பும் தோன்றும் அவ்வேளைகளில் அவர்கள் துளசியை உண்டு வந்தால் நல்ல பலனை தரும்.
துளசி ஜீரண சக்தியை அதிகரிக்கும், துளசி நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. உடலில் ஏறபடும் தேமல்,படைகள்.சொறி,சிரங்கு போன்றவற்றிற்கு துளசிசாறை உடலில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
இருதயம்,கல்லீரல் போன்ற உறுப்புகளில் எந்த உபாதைகளும் ஏற்படாமல் காக்கிறது.
துளசி நாட்பட்ட இருமலை குணப்படுத்துகிறது.
சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவை குணமாக்குகிறது.
கைகால் மூட்டு வலிகள் மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு துளசி சாற்றை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாயுத் தொல்லையை போக்குகிறது.
இரத்த அழுத்த நோயைக் கட்டுபடுத்துகிறது.
தோலில் ஏற்படும் படை, சொறி,சிரங்கு,தேமல் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
சிறுநீரகத்தில ஏற்படும் பிரச்சனைகளையும் போக்குகிறது.
சுற்றுப் பறத்திலுள்ள கிருமிகளை அழித்து,சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.
மூல வியாதியை கட்டுப்படுத்துகிறது.
வெண்குஷ்டத்தை போக்குகிறது.
இதய சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்துகிறது.
துளசி சாற்றால் தலையை கழுவ பேன்,ஈறு நீங்குகிறது
பல்லில் சொத்தையோ,ஈறு வீக்கமோ இருந்தால் துளசி சாற்றோடு கிராம்புத்தூள், கற்பூரம் கலந்து வைக்க குணம் கிடைக்கும்.
துளசி சாற்றை இரண்டு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினமும் பருகி வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் தாக்காது.