Site icon News – IndiaClicks

அல்சர் வருவதற்கான காரணங்கள் மற்றும் குணமடையும் வழிகள்….!

tmpooja-ulcer-online-mega-pooja-store
நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது.  இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மதுப் பழக்கம் மற்றும்  புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன. வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள்.
அல்சருக்கான காரணங்கள்:
அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர  அடிக்கடி  சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.
நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும். மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில்  ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.
புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது
அல்சரை குணப்படுத்த வழிகள்:
மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக்  கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து  வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.
மிளகைப் போடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதன் மூலம் அல்சரை குணப் படுத்தலாம்.
வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.