நெல்லிக்காய் பொடி

பயன்கள்:

மெட்டபாலிசம் மேம்படும்

உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

நச்சுத்தன்மையை நீக்கும் பணி

உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும். அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை உங்கள் உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது. இவ்வகையான நச்சுக்கள் உங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது. சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.

சக்தி வாய்ந்த புத்துணர்ச்சி

நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும். எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உங்கள் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும். அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும்.

ஒட்டுமொத்த பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும். கனிமங்கள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி) மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை நெல்லிக்காய் ஜூஸ் அளிப்பதால், உடல் திடமாக கட்டுக்கோப்புடன் விளங்கும். அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸை சீராக குடிக்க வேண்டும்.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும். நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல் கூடும்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

 

BEST HERBAL PRODUCTS

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *