மணத்தக்காளி பொடி

பயன்கள்:

வாய்ப்புண்

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தொண்டை கரகரப்பு

தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

உடல் வெப்பம்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும்.

காசநோய்

காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

கை கால் வலி

காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

சரும அலர்ஜி ச

ருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.

சிறுநீர் கோளாறு

சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

கருத்தரிக்க…

கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும்.

கல்லீரல் பிரச்சனைகள்

மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிகப்படியான களைப்பு

அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், உடல் களைப்பை போக்குவதோடு, நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

நெஞ்சு வலி

மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும்.

 

 BEST HERBAL PRODUCTS 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *