Site icon News – IndiaClicks

குப்பைமேனி இலைபொடி

kuppaimeni

பயன்கள்:

ஆஸ்துமா குணமடையும்

மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.

இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

குழந்தைகளுக்கு

குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.

தோல்வியாதிகள்

இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.

மூலநோய்க்கு மருந்து

மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

 

 BEST HERBAL PRODUCTS

 

Exit mobile version