அரிய நோய்கள் போக்கும் அருமருந்து வெந்நீர்.!
பெரும்பாலானோர் குளிர்ந்த நீரை அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்துகிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீரினை அருந்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
தாகம் எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சு டான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடிப்பதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாமல் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். ஏனெனில் அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி உண்டாகும்.
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட் அல்லது புரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உணவும் செரித்துவிடும்.
காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்றால் ஒரு டம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். இதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும்.