மருந்தாகும் வெண்டைக்காய்

பயன்கள்: 

5 பசுமையான வெண்டக்காய்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நன்றாக நீரிட்டு கழுவி, எடுத்துக்கொண்டுஅதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப் பகுதியில் துண்டித்துவிட்டு, வெண்டக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் இட்டு, 500 மி.லி. நீர் விட்டு, சிறு தீயில் கொதிகக்விட்டு, 3ல் 2 பங்கு நீர் வற்றியதும், இறக்கி வைத்து பாத்திரத்தை மூடி, இரவு முழுவதும் வைத்துவிடவும். காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்றுவிட்டு, நீரையும் குடித்துவிடவும்.
* இது மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
* சர்க்கரை நோயாளிகள், தினம் 3 வெண்டைக்காய்களை மேற்சொன்னபடி ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி, இரவு முழுவதும் விட்டு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை மட்டும் குடித்துவிடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்துவிடும்.
* இது புற்று நோய் உள்ளவர்களுக்குக்கூட ஒரு துணை மருந்தாகப் பயன்படும்.
* இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக்காய்களை மேற்சொன்னவகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.
* வெணடைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து, 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர் விட்டு பாதி அளவாகக் காய்ச்சி, தேன் சேர்த்து, 70 மி.லி.எடுத்து, 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குடிக்க வெள்ளைப் போக்கு(ஆண் பெண் இருபாலருக்கும்), இருமல், நீர்க் கடுப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.
* 3 வெண்டைக்காய்களை துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், , தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *