Site icon News – IndiaClicks

பூண்டின் மகத்துவம்

tmpooja-garlic-online-mega-pooja-store

பயன்கள் :

உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்ல; ஏராளமான மருத்துவ குணங்களும் நிரம்பியது பூண்டு. ஏப்ரல் மாதம் 19ம் தேதியை பூண்டு தினமாக அனுஷ்டிக்கிறார்கள். பூண்டின் மகத்துவத்தைப் பரப்பவும், அதனைப் பயிரிடும் முறை பற்றிய ஆலோசனைகள் வழங்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
6000 ஆண்டுகளுக்கு முன்னதாகவெ, மக்களுக்கு பூண்டின் உபயோகம் தெரிந்திருக்கிறது. பூண்டின் பூர்வீகம் ஆசியாக் கண்டம்தான். உலகிலேயே அதிகமாக பூண்டை விளைவிக்கும் நாடு சீனா. கி.மு. 2500ல் வாழ்ந்த எகிப்தியர்கள், மிகப் பெரிய ‘காஸா பிரமிடை’ கட்டியவர்களுக்கு அதிக அளவில் உண்ணக் கொடுத்தது பூண்டுதான். களைப்பும் நோயும் அண்டாமல் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழில் புரிவதற்காகக் கொடுக்கப்பட்டதாம்.
பூண்டில் அதிக அளவில் புரதம் இருக்கிறது.

வைட்டமின்கள் ஏ, பி1, மற்றும் சி ஆகியன அஇருக்கின்றன. கால்சியம், மக்னீசியம் இரும்புச் சத்தும் உண்டு. மேலும் 17 வகையான அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. பூண்டு உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது. ஆயுளை நீடிக்கிறது.

சில வகையான புற்று நோய்களை தடுக்கின்றது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சில தோல் நோய்களுக்கும் பல்வலிக்கும்கூட மருந்தாகிறது. சளி இருமலைக் கட்டுப்படுத்துகின்றது. சோர்வைக் குறைக்கின்றது. தீய ஆவிகளை ஓட்டும் சக்தி பூண்டுக்கு இருப்பதாக சில மதங்கள் சொல்கின்றன.
நம் உணவில் அனுதினமும் பூண்டை சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

 

http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/dhathri-hair-care-plus-herbal-oil/