புதினா இலை
பயன்கள்:
- நம் சமையலில் மணத்துக்காக சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. உதாரணமாக நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
- புதினா கீரையை தினமும் உணவில் சேர்த்தால் உடம்பின் ரத்தத்தை சுத்தம் செய்வது அல்லாமல், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
- மலச் சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். புதினா வயிற்ரில் உள்ள புழுக்களை அழித்து வாயுத் தொல்லையைப் போக்குகிறது.
- தசைவலி, நரம்புவலி, தலைவலிபோன்ற வலி உள்ள இடங்களில் புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டு வந்தால், வலிகள் மறையும். ஆஸ்துமா ஏற்படாமலும் புதினா தடுக்கிறது. மஞ்சள் காமாலை , வாதம், வறட்டு இருமல், ரத்தசோகை , நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவரகள் இந்த புதினா கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா கீஅரியின் சாறை முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிவர முகம் பளபளப்பாகும்.
- புதினா இலைகளைக் காய வைத்து, பின் அதை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் அதைக் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
- ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் புதினாவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுநீர் பிரச்சனைகளுக்கும் கூட புதினா நல்ல தீர்வு தரும்.
- மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொண்டால், மூச்சுத் திணறலை பிரச்சனைக்கு நல்லதோர் தீர்வுக் காணலாம்.
- நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் தன்மை புதினாவிற்கு உண்டு, கை கால் இழப்புகளுக்கும் கூட புதினா தீர்வளிக்கும் என்று கூறப்படுகிறது.
- வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் போது, புதினாவை மென்று அதன் சாற்றை பருகினாலே, குமட்டல், வாந்தி போன்றவை நின்றுவிடும்.
- புதினா ஓர் சிறந்த வாய் துர்நாற்ற நிவாரணியாக செயல்படுகிறது. காலை வேளைகளில் புதினாவை பச்சை தண்ணீரில் கழுவி, மென்று வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் முழுமையாக சரியாகிவிடும்.
- வறட்டு இருமலை இருப்பவர்களுக்கு புதினா ஓர் நற்மருந்தாக பயனளிக்கிறது. புதினா டீ அல்லது புதினா சாற்றைக் குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும். BEST HERBAL PRODUCTS