நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் சில உடல்நல பயன்கள்!!!
சில நேரம் வீட்டில் பொட்டு வைக்க சொல்லி வலியுறுத்தியும் கூட பெண்கள் அதை செய்யாததால், அவர்கள் கத்தி கத்தி அலுத்து கொள்வார்கள். ஆனால் இந்த பாரம்பரியம் ஏன் வந்தது என்ற கேள்வி மட்டும் பலருக்கு தோன்றி கொண்டே தான் இருக்கிறது. அப்படி ஆராய்ந்தால், நம் முன்னோர்கள் ஏன் இந்த பழக்கத்தை கொண்டு வந்தார்கள் என்ற காரணம் நமக்கு புரியும். அதனை பற்றி நாம் பார்க்கலாமா? பொட்டுக்கள் பொதுவாக நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும். சிலர் அதனை சற்று மேல் உயர்த்தி வைக்க விரும்புவார்கள். ஆனால் அதற்கான தாக்கம் மாற போவதில்லை. சரி வைக்கும் இடம் ஏன் முக்கியம்? இதோ, அதற்கான காரணம்:
விழிப்புணர்வு மற்றும் ஒருமுகப்படுத்தலின் மையம்
நம் நெற்றியில், இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தான் நம் உடலில் உள்ள முக்கிய நரம்புகள் சந்திக்கின்றன. இது போக இந்த புள்ளி ஆறாம் நிலையாக கருதப்படும் முக்கியமான சக்கரமாகும். ‘அஜ்னா சக்கரம்’ என அழைப்படும் இந்த சக்கரம் தான் விழிப்புணர்வு புள்ளியை குறிப்பிடும். மேலும் இது மூன்றாவது கண்ணின் நிலையை குறிக்கும். இந்த புள்ளி ஊக்கவிக்கப்படும் போது, ஒருவருக்கு பல வழிகளில் அது உதவிடும். மனதை அமைதியாக்குதல், பதற்றத்தை குறைத்தல் போன்றவைகள் அதில் சில. மேலும் ஒருவருக்கு இரண்டு கண்களால் பார்க்க முடியாத சில விஷயங்களை இந்த புள்ளியின் மூலமாக பார்க்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்தநாள் கிடைக்கும் அனைத்து ஆன்மீக பயன்களை தவிர இதில் பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.
தலைவலியை நீக்கும்
அக்குப்பிரஷர் நெறிமுறைகள் படி, உடலில் உள்ள இந்த புள்ளி மூலம் தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்குமாம். காரணம் இந்த புள்ளியின் மூலம் நரம்புகள் மற்றும் இரத்த குழாய்களின் குவிதல் உடனடியாக அமைதியுறும். தலைவலியை நீக்க இயற்கையான சிகிச்சைகளும் உள்ளது.
சைனஸ் பிரச்சனையை நீக்கும்
பொட்டு வைக்கும் போது நெற்றிப்புள்ளியை அழுத்தும் போது, மூக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு செல்லும் முக்கிளை நரம்பின் (முகத்திற்கு செல்லும் நரம்பியல்கள்) ஒரு குறிப்பிட்ட கிளை (முதுகெலும்பு நரம்பு, நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட மற்றும் அக்குள் நரம்பு) ஊக்குவிக்கப்படும். இந்த புள்ளியை ஊக்குவிக்கும் போது, இந்த நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு, மூக்கின் துவாரகம், மூக்கின் சளி பாதை மற்றும் சைனஸ் போன்ற இடங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூக்கடைப்பு நீங்கி, சைனஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் வற்றி, நாசி அடைப்பு மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சைனஸை பிரச்சனைக்கான வீட்டு சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தின் தசைகளை திடமாக்கி சுருக்கங்களை நீக்கும்
பொட்டு வைக்கும் நெற்றிப்புள்ளியை ஊக்குவிப்பதால் கிடைக்கும் மற்றொரு வியப்பூட்டும் பயன், முகத்தின் தசைகளை ஊக்குவித்து அதற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் தசைகள் திடமாகி, சருமம் பொழிவடைந்து, சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். இவைகள் போக, இந்த புள்ளி சுப்ரட்ரோகிளியர் நரம்பின் வீடாக திகழ்கிறது. இதனால் மிருதுவான சருமம் கிடைத்து, ஆரோக்கியமான சுருக்கமற்ற சருமமும் கிடைக்கும்.
முக வாதத்திற்கான நிவாரணி
இந்த புள்ளியில் மசாஜ் செய்தால் முகத்தில் வாதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இந்த புள்ளியில் மசாஜ் செய்வதால் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கூம்பகத்தசை ஊக்குவிக்கப்படும். நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட கிளை நரம்புகளில் உள்ள க்ரானியல் மசில் ஃபைபர் இந்த தசைகளை ஊக்குவிக்கும். முகத்தின் வாதத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் முகத்தின் அனைத்து தசை அசைவுக்கும் இதுவே பொறுப்பாகும். இந்த புள்ளியில் மசாஜ் செய்யப்படுவது ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்மா கிளையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு ‘ஷிரோதாரா’ என்பதே பெயராகும். இந்த சிகிச்சையில் மருத்துவ எண்ணெய் தொடர்ச்சியாக நெற்றிப்பொட்டில் ஊற்றப்படும். இதனை 40-60 நிமிடங்கள் வரை ஊற்ற வேண்டும். முக நரம்புகளை இது மிகவும் ஆழமாக ஊக்குவிக்கும். இதனால் முக வாதத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
கண்களின் தசைகளுக்கு நல்லது
நெற்றியின் மையப்பகுதி கண்கள் மற்றும் சரும தசைகளை ஊக்குவிக்கும் நரம்புகளுடன் நேரடி தொடர்புள்ளது. கண்களை சுற்றியுள்ள கண்களுடன் இந்த நரம்பு தொடர்பில் உள்ளது. அதனால் கண்களை நினைத்த பக்கம் திருப்பி கொள்ள இது உதவுகிறது. உங்கள் கண்களின் வடிவத்தை மாற்றவும் இந்த தசைகள் முக்கியமாக உதவுகிறது. இதனால் பொருட்களை மிக சுலபமாக காணலாம்.
கேட்கும் திறனுடனும் தொடர்பில் உள்ளது
முகத்தின் தசைகளை ஊக்குவிக்கும் ஒரு நரம்பு, உங்கள் நத்தைச்சுருணரம்பையும் ஊக்குவிக்கும். இது காது கேட்க தேவைப்படும் உட்காதின் முக்கிய பகுதியாகும். அதனால் இந்த புள்ளியை ஊக்குவிப்பதால் உங்கள் காதுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் குறையும்
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் பல பேர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். இந்த கோடுகளை நீக்க வேண்டுமானால், உங்கள் புருவங்களுக்கு மத்தியில் உள்ள புள்ளியை தினமும் ஒரு முறை மசாஜ் செய்யுங்கள். இந்த இடத்தில் தான் மூக்குக்கூம்பகத்தசை உள்ளது. இந்த இடத்தை மசாஜ் செய்வதால் தசைகள் திடமாவதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்த பகுதியில் உள்ள சரும பகுதிகளை நரம்புகள் ஊக்கவிக்கும். இதனால் அவ்வகை கோடுகள் மறையத் தொடங்கும்.
மனதை அமைதிப்படுத்தும்
அஜ்னா சக்கரம் அல்லது உங்கள் புருவங்களுக்கு மத்தியில் உள்ள பகுதி, பதற்றம் மற்றும் அழுத்தத்தால் சுலபமாக பாதிப்படையும் இடமாகும். இங்கு தான் பொட்டு முக்கிய பங்கு வகிக்றது. இந்த புள்ளியை தினமும் மசாஜ் செய்வதால் இந்த பகுதியில் உள்ள தசைகளும் நரம்புகளும் உடலை சாந்தப்படுத்தும். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, இந்த புள்ளியை நன்றாக அழுத்துவது அவசியமாகும். அதனால், அமைதியான ஒருங்கிணைந்த மனதை பெற, இந்த இடத்தை தினமும் ஒரு முறையாவது மசாஜ் செய்யுங்கள்.
தூக்கமின்மையை நீக்கும்
பொட்டு அணியும் இடம் தூக்கமின்மையை நீக்கவும் உதவும். இது உங்கள் மனதை மட்டும் சாந்தப்படுத்தாமல், உங்கள் முகம், கழுத்து, முதுகு மற்றும் மேல் உடம்பின் தசைகளை அமைதியுறச் செய்யும். ஆயுர்வேதத்தின் படி, தூக்கமின்மை ஏற்படுவதற்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் அதிகமாக செயல்படும் மனது போன்றவைகளே காரணமாக அமைகிறது. அதனால் தினமும் சிறிது நொடிகளுக்கு இந்த புள்ளியை மசாஜ் செய்யுங்கள். இதனால் உங்கள் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அது உதவில்லை என்றால், ஷிரோதரா என்ற சிகிச்சை முறையை கையாளலாம்.