குறைவாக தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா?
நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது. 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனைப் பாருங்கள். அனைவரும் ஒழுங்காய் தண்ணீர் குடிப்பீர்கள்.* தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட் டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும்.* உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது சுவாச காற்று மாற்றம் குறைபடும். காரணம் இருக்கும் நீர்சத்தினை உடலில் தக்க வைக்க உடல் எடுக்கும் முயற்சி இது. இதனால் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும்.* நீர் சத்து உடலில் குறையும் போது இருக்கும் நீர் சத்தினை தக்க வைக்க அதிக கொழுப்பு சத் தினை உருவாக்கும்.* உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு இவை தேங்குவ தால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் ஏற்படும்.
கூடவே வீக்கம், வலி ஏற்படும்.* குடல் உடலில் நீர் சத்தினை அதிகம் இழுக்கக் கூடியது. நீர்சத்து குறையும் பொழுது கழிவுகள் காலதாமதாக பெருங்குடலுக்குச் செல்லும். அல்லது செல்லாது தேங்கி, கடினப்பட்டு இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.* மூட்டுகளுக்கு அதிக நீர்சத்து தேவை.
நீர்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.* நீர்சத்து குறையும் பொழுது செல்களுக்கு நீர் இல்லாததால் தாகம் எடுக்கும் பொழுது அவர்கள் அதனை உணராமல் அதிகம் உண்கின்றனர். இதனால் எடை கூடும்.* தொடர்ந்து உடலில் நீர் குறைபாடு இருக்கும் பொழுது அனைத்து உறுப்புகளும், சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதி லேயே முதுமை தோற்றம் பெறுவர்.* ரத்தம் 92 சதவீதம் நீர் கொண்டது. நீர் குறையும் பொழுது ரத்தம் கடினப்படுகின்றது.
இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.* சருமம் உடலின் நச்சுப் பொருட்களையும், கழி வுகளையும் கூட வெளியேற்றும் வேலையினைச் செய்கின்றது. நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சரும பாதிப்புகளை ஏற் படுத்தும்.* நீர் குறைபாடு வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.* மனித உடலில் 75 சதவீதம் நீர்தான். 8-10 கிளாஸ் நீர் தினம் அருந்துங்கள் என்று சொன்னாலும் உடற்பயிற்சி, தட்ப வெப்பநிலை. கர்ப்பகாலம், தாய் பால் கொடுக்கும் காலம், நோய்வாய்பட்ட காலம் இவற்றில் கூடுதல் நீர் தேவைப்படும்.கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள் கீரைகள் மட்டுமின்றி அவற் றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன.
தண்டுக்கீரை யின் விதையில் குளூட்டன் எனப் படும் புரதம் கிடையாது. எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாக உட்கொள்ளலாம். கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.ஒரு கோப்பை கீரை விதையில் 26 கிராம் புரதச் சத்து உள்ளது. அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ் பரஸ், இரும்புச்சத்து போன்றவை யும் உள்ளன.
கீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.உடல்நலம் காக்கும் மருத்துவ குறிப்புகள்அநேகருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு மருத்துவ சந்தேகம் இருக்கும். கேட்பதற்கு சங்கடப்படவும் செய்வர். அத்தகையோருக்காகவும் மேலும் அனைவருக்காகவும் சில பொதுவாக அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களின் பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.* நீரிழிவு நோய் பிரிவு 2 பாதிப்பு உடையோர் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாமல் மருந்திலேயே காலம் முழுவதும் சமாளிக்க முடியுமா? நீரிழிவு நோய் வளர்ந்து கொண்டே வரக் கூடிய பாதிப்பு குணம் கொண்டது தான்.
இதனை உட்கொள்ளும் மருந்தின் மூலம் மட்டுமே கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்ற கேள்விக்கான பதில் பல விஷயங்களைச் சார்ந்துள்ளது.பாதிப்புடையவர் தனது எடையினை அளவாக வைத்துக் கொள்ளுதல், தவறாது உடற்பயிற்சி செய்தல், பரம்பரை, உடலில் ஹார்மோன்களின் செயல்திறன், இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் என பல காரணங்கள் இதனுள் அடங்கி உள்ளது. எனினும் ஆய்வுகள் கூறுவது இந்நோயின் ஆரம்ப காலத்திலிருந்தே முனைந்து கட்டுப்பாட்டில் தொடர்ந்து கொண்டு வந்தால் வருடங்கள் கூடும் பொழுது இது மிக நல்ல பலனை அளிக்கின்றது.* தேவையான அளவு தூக்கம் தேவை என அறிவுறுத்தப்படுவதை அலட்சியமாகக் கருதாதீர்கள். 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். பிஸியான வாழ்க்கை, வேலை, குடும்பம் என்ற சூழலில் நம்மால் தேவையான தூக்கம் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
இதனை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை தூக்க சுகாதாரம் என்று கூறுவதுண்டு. இதனை பின்பற்றும் பொழுது சோர்வு அதிகம் நீங்கும்.* தினமும் குறிப்பிட்ட அதே நேரத்திற்கு படுக்கச் சென்று குறிப்பிட்ட அதே நேரத்தில் விழிக்கப் பழகுங்கள். மறுநாள் விடுமுறை தானே என கண் விழித்து சினிமா பார்ப்பது போன்றவற்றினை தவிருங்கள்.* தூங்கப் போவதற்கு 8 மணி நேரம் முன்பாக காபி, டீ போன்றவற்றினைத் தவிருங்கள்.
உங்களது மாலை காபி, டீயினை அடியோடு தவிர்த்து விடுங்கள். இன்னமும் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றால் மதியம் 12-க்குப் பிறகு இவற்றினைத் தவிர்ப்பதே முறையானது.* ஆல்கஹாலை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில்லை. நிறுத்தி விடுங்கள். அடியோடு நிறுத்தி விடுங்கள் என்றுதான் அறிவுறுத்தப்படுகின்றது.* தூக்கமின்றி படுக்கையில் படுக்காதீர்கள்.
படுக்கைக்கு சென்ற பிறகு 20 நிமிடங்கள் கழித்தும் தூக்கம் வரவில்லை என்றால் உடனடி எழுந்து விடுங்கள்.எழுந்து அமர்ந்து ஏதாவது படியுங்கள். டி.வி. கூட பாருங்கள். ஆனால் இதனை படுத்துக் கொண்டே செய்யாதீர்கள்.
http://tmpooja.com/shop/pooja-items-online-pooja/pooja-samagri-online-homa-items-online-door-delivery-free-shipping/benzoin-powder/