கண்டங்கத்திரி
பயன்கள்:
கண்டங்கத்திரியின் இலை,காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.
இதன் காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு குழம்பு மற்றும் சாம்பார் செய்து சாப்பிடுகின்றனர். இதனால் உடல் அலுப்பும்,இரும்பலும் சமனமாகி விடுகின்றன.
ஓயாத இரும்பல் இருக்கும் காலங்களில் கண்டங்கத்திரி வேரை ஒரு ரூபாய் எடையளவு தட்டிப் போட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 6 கிரைன் திப்பிலித் தூளும் சிறிது தேனும் சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டு வர இரும்பல் குறைந்து விடுகின்றது.
சாதாரண சுரம் ஏற்படும்போது கண்டங்கத்திரி வேரையும் சுக்கையும் சேர்த்து கஷாயம் வைத்து அருந்தி வருவதால் நல்ல பலன் கிடைக்கும் இதனால் உடல் சோர்வும் தளர்ச்சியும் நீங்கிவிடும்.
உடலில் அதிகம் உஷ்ணம் ஏற்படும் போது சில சமயங்களில் சிறுநீர் தாரளமாக இறங்காமல் வலி ஏற்படுவதுண்டு . அந்த சமயங்களில் கண்டங்கத்திரி இலைச் சாற்றோடு தேனை சம்மாய்க் கலந்து (இரண்டும் சேர்ந்து 1/2 அவுன்ஸ்) ஒரு வேளை கொடுக்க நல்ல பலன் அளிக்கும்.சாதாரணமாக ஏற்படும் கை கால் வீக்கங்களுக்குக் கண்டங்கத்திரி விதையை நீரில் அரைத்து பற்றுப் போடுவதன் மூலம் குணமைடைகின்றனர்.
BEST HERBAL PRODUCTS