உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் கைவைத்தியங்கள்!!
நசுக்கிய வெள்ளை பூண்டு : இந்த நீர் தேக்க பிரச்சினையை போக்க வெள்ளை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஏனெனில் பூண்டு ஒரு டையூரிடிக் இது நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் நச்சுக்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி விடும். மேலும் பூண்டில் உள்ள பொருட்கள் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த முறையின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். பச்சையாக பூண்டை உங்கள் வாயில் மெல்லும் போது ஒரு துர்நாற்றம் வீசும். எனவே இதை செய்த பிறகு மெளத் வாஷ் அல்லது புதினாவை மென்றால் இந்த நாற்றம் இருக்காது.
வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் லெமன் ஜூஸ்(உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல்) ஒரு சக்தி வாய்ந்த டையூரிடிக் ஆகும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும். அரை லெமனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தயாரிக்கவும். நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெங்காயம்; பூண்டு, வெங்காயம் ஒரு சிறந்த டையூரிடிக். இவைகள் நமது இரத்த அழுத்தத்தக குறைத்தல் மற்றும் சோடியம் – நீர்ச்சத்து இவற்றை சமநிலையாக்கி நமது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. எனவே வெங்காயத்தை நசுக்கி ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஒடிமா சரியாகி விடும்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகமான பொட்டாசியம் உள்ளது. இது நமது உடலில் உள்ள சோடியத்தை சமநிலைபடுத்துகிறது. ஒரு நாளைக்கு மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.
ஊறிய உலர்ந்த திராட்சை : உலர்ந்த திராட்சை யிலும் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் அதை சாப்பிடவும். தேங்கிய நீர் முற்றிலுமாக வற்றிவிடும்.
உப்பை குறைக்கவும் உணவில் போடப்படும் உப்பை அறவே குறைக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுங்கள். ஏனெனில் அதிகமான உப்பு உடம்பில் நீர் தேக்கங்களை ஏற்படுத்தும். எனவே உப்பை குறைக்கும் போது தேங்கிய தண்ணீர் வெளியேறிவிடும்.
யோகார்ட் : ஒரு பெளல் யோகார்ட்டை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செல்களின் சுவர்களுக்கிடையேயுள்ள நீர் தேக்கத்தை சரி யாக்கி விடும். ஏனெனில் யோகார்ட் ஒரு பால் பொருட்கள் அடங்கியது. இவைகள் எளிதாக நீரை ஊறிஞ்சி விடும். எனவே செல்களின் சுவர்களுக்கிடையே நீர் தங்காது.
பார்ஸிலி டீ : பார்ஸிலியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை அதிகப்படியான சோடியம் உருவாகுவதை தடுக்கிறது. எனவே உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும். டீ தயாரிக்க கொதிக்கின்ற தண்ணீரில் பார்ஸிலி இலைகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்றால் நல்ல பலன் கிடைக்கும்.
கிரான்பெர்ரி ஜூஸ் : ஒரு நீளமான டம்ளரில் தினமும் ஒரு முறை கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் நீர் தேக்கத்தை சரி செய்கிறது. ஏனெனில் இது ஒரு டையூரிடிக் என்பதால் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர்ச்சத்தை வெளியேற்றுகிறது.
எப்சம் உப்பு : எப்சம் உப்பு என்பது ஒரு விதமான உப்பாகும். இது நமது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும். ஒரு பக்கெட் நிறைய வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அதில் நீர் தேங்கியுள்ள பகுதியை மூழ்க வைக்க வேண்டும். கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும். இப்படி செய்யாவிட்டால் உங்கள் பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் எப்சம் உப்பு கலந்து குளித்தாலும் நீர் கட்டு இறங்கி விடும்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத்தில் அனிதோல் என்ற பொருள் உள்ளது. இதிலும் டையூரிடிக் பொருள் இருப்பதால் நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதோடு நமது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
ஐஸ் பேக் : சில ஜஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொண்டு வீங்கிய இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து அப்புறம் 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 1மணி நேரம் செய்ய வேண்டும். கொஞ்சம் கனமான துணியாக இருக்க வேண்டும்.