இசையில் இவ்ளோ நன்மையா.?
இசை, மனித உடலின் ஹார்மோன் மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடு ஆகியவற்றில் நேரடியாக தொடர்பு கொள்கிறது. நம் வாழ்வின் எல்லா விதமான உணர்ச்சிகளுக்கும் ஏதோ ஒரு இசையோ இல்லை பாட்டோ நம்முடன் பயணித்திருக்கும்.
இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் இசையை ரசிப்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெறுவர் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. நல்ல இசை நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
மன அழுத்தத்தை போக்கும். வாழ்க்கையை அழகாக மாற்றும். இதுபோல இசை குறித்த சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.!
உடனடியாக உங்கள் உணர்ச்சிக்கு ஒரு உச்சம் வேண்டும் என்று நினைப்பவர்கள், தனக்கு பிடித்த இசையை ஒரு 15 நிமிடங்கள் கேட்டால் போதும், அவர் உணர்ச்சியின் உச்சத்தை தொட்டிருப்பார்.
இதற்கு காரணம் பிடித்த இசையை கேட்கும்போது, ஒருவரது மூளை டோபமைன் என்ற கூறை வெளியிடுகிறது. இது ஒரு நரம்பியல் கடத்தி. இதன் மூலம் சந்தோசம், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது.!
இசை ஹார்மோன்களில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. நமக்கு பிடித்த இசையை நாம் கேட்கும்போது உடலில் ஹார்மோன் கார்டிசோல் அளவை இது குறைகின்றது. பல்வேறு இசை கருவிகளை வாசிப்பவர்களுக்கும் இசையை ரசிக்காதவர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் இசை விரும்பிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓடும் திறனை அதிகரிக்கும்.!
ஓட்ட பந்தயத்தில், ஊக்கமளிக்கும் வகையில் வேகமான அல்லது மெதுவான பாடல்களை கேட்பவர்கள் வேகமாக ஓடுகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேகமாக செயல்பட இசை ஒரு உந்து சக்தியாக இருப்பதாக கூறுகின்றனர்.
இசை தூக்கத்தை மேம்படுத்தும்.!
இன்று பலர் தூக்கமின்மை எனும் இன்சோம்னியாவால் பாதிக்கப்படுகின்றனர். தூங்க செல்லும் 1 மணி நேரம் முன், ஏதேனும் ஒரு மனதை வருடும் இசை கேட்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
இசையால், தலையில் உள்ள பாரத்தை இறக்கி, பாதங்களை லேசாக்கி, நல்ல மன நிலையை தருவது தான். பிடித்த இசையுடன் நாளை ஆரம்பிக்கும் போது, அந்த நாளை வெற்றிகரமாக கையாள முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரும்.