அம்மான் பச்சரிசி பொடி

பயன்கள்:

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க
அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

மலச்சிக்கலைப் போக்க
இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற
உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு
வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்

இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).
.
மரு நீங்க
அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.

தாது பலப்பட
அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.

இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.

இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும்,மலமிளக்கும், சுவாசத்தைச் சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும், விந்து ஒழுக்கை குணமாக்கும்.
அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர கால் ஆணி,பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.

 

BEST HERBAL PRODUCTS 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *