ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன? வாட்ஸ் அப்பில் பரவி வரும் செய்தி

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஏர்செல் நெட்வொர்க் செயல் இழந்த நிலையில் ஏர்செல் தனது சேவையை நிறுத்தி கொண்டதாகவும், திவால் நிறுவனமாக மாறவுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த சில மணிநேரங்களாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த செய்தி இதுதான்:

ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள் : மற்ற நெட்வோர்க்கின் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால்,
6 மாநிலங்களில் ஏர்செல் அதன் சேவையை 2018 ஜனவரி 31ல் முழுதுவதுமாக
நிறுத்திவிட்டது. அதன் எதிரொலி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் 2018 பிப்ரவரி 28 லிருந்து தனது சேவையை முழுவதுமாக நிறுத்தவிருக்கிறது. ஆகையால் வாடிக்கையாளர்கள் விரைவில் தாங்கள் தங்கள் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறிக்கொள்ளுங்கள்.
வேறு நெட்வொர்க் மாற வசதியாக ஏர்செல் MNP CODE (Mobile Number Portability) எண்ணை உடனடியாக ஒரு நிமிடத்தில் வழங்கி வருகிறது. உங்கள் போனில் PORT என டைப் செய்து உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து
டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்புங்கள். அனுப்பிய அடுத்த நிமிடத்தில் MNP கோடு எண்ணை அனுப்புகிறது.உதாரணம் : (PORT 1234567890 Send To 1900 பதிலாக 6 இலக்க எண்ணை கோடாக அளிக்கிறது. ( DT 123456)
அந்த எண்ணுடன் உங்கள் ஆதாரை அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பிற நிறுவன சிம் விற்கும் கடையை அணுகி
உங்க எண்ணை மற்ற நிறுவனத்திற்கு மாற்றிகொள்ளலாம். இதற்காக கட்டணம் ஏதும்
வசூலிப்பதில்லை. *MNP code பெற கடைசி தேதி 2018 பிப்ரவரி 28 வரை மட்டுமே. இந்த MNP CODE எண் இல்லாதபட்சத்தில் வேற நெட்வொர்க் மாற்ற இயலாது. உடனே டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று உங்கள் எண்ணை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : மார்ச் 1ம் தேதி ஏர்செல் முற்றிலும் தன் சேவையை நிறுத்திய பிறகு MNP CODEம் பெற இயலாது. தங்கள் மொபைல் எண்ணையும் திரும்ப பெற இயலாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *