Site icon News – IndiaClicks

பழைய சாதாரண போனுக்கு மாறும் ஐடி நிறுவன ஊழியர்கள்: ஏன் தெரியுமா? திடுக்கிடும் தகவல்

tamil.neew.co.in-it workers
தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. ஆனால் தற்போதைய அதிநவீன டெக்னாலஜி உலகில் ஒரு ஆண்ட்ராய்டு போன் எந்த அளவுக்கு நமது பிரைவசியை அச்சுறுத்தும் என்பதை பலர் புரிந்து கொள்ளமால் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ் குழுவினர் என்ற அமைப்பு ஆண்ட்ராய்டு போன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விளக்கியுள்ளனர். நீங்கள் பயன்படுத்தும் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தெரிந்தால் போதும், உங்கள் போன் ஆன் நிலையில் இல்லாமல் இருந்தாலும் அதை எங்களால் இயக்க முடியும் என்றும், உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் எங்களால் லேப்டாப் மானிட்டரில் இருந்து பார்க்க முடியும் என்றும், உங்களுடைய வாட்ஸ் அப், வங்கிக்கணக்கு உள்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளவோ, டெலிட் செய்யவோ முடியும் என்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக செய்து காட்டியுள்ளனர்.

இந்த ஆபத்தை புரிந்து கொண்டு தான் பல ஐடி ஊழியர்கள் மீண்டும் பழைய சாதாரண போன்களுக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. பல மோசடி ஆப்ஸ்கள் தான் இதற்கு காரணம் என்றும், தேவையில்லாமல் லிங்க் வந்தால் எந்த காரணத்தை முன்னிட்டும் அதனை க்ளிக் செய்ய கூடாது என்றும் தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.,