அதிகப்படியான விலை நிர்ணயம்; விரைவில் ஆபத்தை சந்திக்கயிருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான விலை நிர்ணயிக்கப்படுவது மொபைல் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்தாக முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்கள் புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாகி மக்களை கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனால் விலை அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு ஸ்மாட்ர்போன் மாடல்கள் இடையில் சிறிய மாற்றம் மட்டுமே இருந்தாலும் விலை வித்தியாசம் வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நபர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் இதழ் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
ஸ்மார்ட்போன்கள் அதிக விலையை நிர்ணயம் செய்வதாலேயே வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க காரணமாக அமைகிறது. உலகம் முழுக்க விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டவை அல்லது பயன்படுத்தப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நிர்ணய விலையை விட பாதி விலையில் கிடைக்கும். புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்போன்கள் கிட்டத்தட்ட புது ஸ்மார்ட்போன் போன்றே வேலை செய்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் இது லாபமாக உள்ளது.
ஆனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இது எதிர்காலத்தில் ஆபத்தாக முடியும். புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான தேடல் இணையதளத்தில் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *