Site icon News – IndiaClicks

சலுகையுடன் விற்கப்படும் ஜியோ போன்: அமேசான்!

tamil.neew.co.in-jio phone
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோல்டி பீச்சர் போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சில காரணங்களுக்காக முன்பதிசு நிறுதப்பட்டு விற்பனை தாமதப்படுத்தப்பட்டது. 
ஜியோ போன் விற்பனை அமேசான் வலைத்தளம் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. ஜியோ போன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்.
ஜியோ போன் விநியோகம் செய்யப்பட்டதும் அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களுக்கு சென்று ஆதார் எண் மூலம் ஜியோ இணைப்பை ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்.
அமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு அமேசான் சார்பில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்ககப்படுகின்றன. இந்த சலுகை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே.