Site icon News – IndiaClicks

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

tamil.neew.co.in-jio 7rupees
பி.எஸ்.என்.எல் ஜியோவுக்கு போட்டியாக தொடர்ந்து அதிரடியாக புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது.
ஜியோ இந்தியாவில் 4ஜியை அறிமுகம் செய்த பின்னர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பத்தில் சரிவை சந்தித்தாலும் தற்போது ஜியோவுக்கு போடியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை கவர புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.7க்கு 1ஜிபி, ரூ.16க்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி ஒருநாள். இணைய பயன்பாடு குறைவாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த பிளான்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.