Site icon News – IndiaClicks

என்னது 4 நாட்களா? வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்கும் ஏர்செல்

tamil.neew.co.in-aircel
முடங்கிய ஏர்செல் சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏர்செல் நிறுவனம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்று ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
ஏர்செல் வாடிக்கையாளர்கள் சேவை முடங்கியதால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று சென்னை அருகே உள்ள தாம்பரத்தில் உள்ள ஒரு ஏர்செல் சேவை மையத்தின் முன்பு இன்று காலை பலர் திரண்டனர். அப்போது அலுவகம் பூட்டப்பட்டது. எனவே, கோபமடைந்த சிலர் கற்களை கொண்டு தாக்கினர்.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் வாடிக்கையாளர்களை மேலும் ஆத்திரமடையும் வகையில் பதிலளித்துள்ளது. ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-
முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும். வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும். ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.