பழங்களின் மருத்துவ பயன்கள்
அன்னாசிப்பழம்:
உடலுக்கு பலத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைத்து காய்ந்த பழத்துண்டுகளை ஒரு டம்ளர் பாலில் ஊறவைத்து தினமும் படுக்க செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பு குடித்தால் பித்தம் சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.
மாம்பழம்:
உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தோல் பளபளப்பாகும். தோல் அரிப்பு நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தை அதிகரிக்க செய்யும். மாம்பழத்தில் சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காயை சேர்த்து அரைத்தால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.
வாழைப்பழம்:
தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் 3 வாரத்திற்கு தினமும் இரவில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டால் பார்வை குறை நீங்கும்.
ஆரஞ்சுப்பழம்:
இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் தூங்க செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சிறிது தேனை சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை வலி, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது போன்றவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பளித்து விழுங்கினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
திராட்சைப் பழம்:
பன்னீர் திராட்சையின் சாறு எடுத்து அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பேரிச்சம்பழம்:
ஒரு டம்ளர் காய்ச்சியப் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம்பெறும். புதிய இரத்தம் உண்டாகும். தோல்கள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் வராது.
எலுமிச்சம்பழம்:
கடுமையான வேலை சுமையினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சைப் பழத்தை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பு நீங்கிவிடும்.
மாதுளம்பழம்:
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம்பழத்தை சாப்பிட்டு வர இருமல் குணமடையும்.