கேன்சர் வராமல் தடுக்கும் 14 உணவுகள்

1. பூண்டு
பூண்டு… குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
2. முட்டைகோஸ்
சத்துக்கள்: வைட்டமின் சி அதிகம் உள்ளன. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் உள்ளன.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இளமையைத் தக்கவைக்கும். கண்ணுக்கு மிகவும் நல்லது.  கேன்சர் வராமல் காக்கும்.
3. காலிஃபிளவர்
காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
4. முருங்கைக் கீரை
சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும்,  ஓரளவு தாது உப்புக்களும் இருக்கின்றன.
பலன்கள்: கண்கள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரியாகும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் உறுதியாகும். தேங்காய் சேர்த்துப் பொரியலாகவும் சாப்பிடலாம்.
5. திராட்சை
திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.
6. இஞ்சி
இஞ்சி ஒரு மூலிகை பொருள். இதன் நன்மைகளோ ஏராளம். ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.
7. மஞ்சள் தூள்
கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.
8. ஆரஞ்சு
சத்துக்கள்: வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் உள்ளன.
பலன்கள்: நாள்பட்ட நோயால் பாதித்துத் தேறியவர்களுக்கு இது நல்ல டானிக்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும்.
9. எலுமிச்சை
வீக்கங்களை கட்டுப்படுத்தும்: உடலிலின் உள்ளுறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் எற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சையிடம் உள்ளது.
சிறுநீரகக் கற்களை தடுக்கும்: தினமும் எலுமிச்சை சாறினை குடித்தால், சிறு நீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து வெளியேறிவிடும். இவை சிறு நீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்து, சிறு நீரகத்தை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்தும்.
தசை மற்றும் எலும்புகளுக்கு பலம்: எலும்புகளுக்கு பலம் அளித்து, அவற்றி இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்கிவிடாமல் பாதுகாக்கிறது. தசைகளுக்கு பலம் தந்து உறுதி பெறச் செய்கிறது. அவற்றில் உண்டாகும் வீக்கங்களை போக்கி, புத்துணர்வை தரும்.
10. மாதுளை
சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து இதில் மிகவும் அதிகம். ஓரளவு  வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இருக்கின்றன.
பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்சனை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம். சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது
11. மிளகாய்
இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகள் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன் படுகிறது.
12. கீரை வகைகள்
புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்க முடியும்
.
13. தக்காளி
தக்காளியில் உள்ள விட்டமின் `சி’ ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
14. க்ரீன் டீ
கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ.
இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள்  இருக்கிறது கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இத தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா கொழுப்பு கரைஞ்சு  சிலிம் ஆகலாம்ங்க. மேலும், சக்கர நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்த கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.
http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/vedha-palm-candy-100g/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *