உலகிலேயே சத்தான உணவு – பழைய சோறு
விபரங்கள்:
அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடத்தில் உள்ளது.
பழைய சோறில் வேறெந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால் இதை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கிறது.
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம், முதுமையை தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க விரும்புவர்கள் தங்கள் காலை உணவுப்பட்டியலில் பழைய சோரை சேர்த்து கொள்ளலாம்.
முதியோர்களின் பிரச்சனையான எலும்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளுக்கு பழைய சோறு ஒரு நல்ல தீர்வாகும். உடல் சூட்டிலிருந்து விடுபடவும் இது உணவுகிறது.
இதில் அதிகளவிலான் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதுடன் இரத்த அழுத்ததையும் சமன்படுத்துகிறது.
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடுவதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.