பூமி கிரகம் அழிய மொத்தம் 7 வழிகள்; அதில் 5 வெறும் டம்மி; மீதி 2 மிக கொடூரம்.!

மாதந்தோறும் ஒரு பண்டிகை விடுமுறை வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆறு மாத கால இடைவெளிக்கும் நிச்சயமாக ஒரு “உலக அழிவு” பீதி கிளம்பி விடுகிறது. ஆனால் உலகம் மட்டும் அழிந்த பாடில்லை, குத்துக்கல்லு போல அப்படியேத்தான் இருக்கிறது என்பது தான் பலரின் “வை ப்ளட் சேம் ப்ளட்” பீலிங்’.!

நாம் அனைவருமே ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்து கொண்டு அதே மரக்கிளையை மெல்ல மெல்ல வெட்டிக்கொண்டே இருக்கிறோம் என்பதும், ஒரு நாள் மொத்தமாக ‘பொத்’தென கீழே சாய்வோம் என்பதும் வெளிப்படை – இப்படி சீரியஸாக பேசும் ஒரு கூட்டம் இருக்க, மறுபக்கம் உலக அழிவை செம்ம காமெடியாக எடுத்துக் கொண்டு ‘ஐ யம் வெயிட்டிங்’ என்று சொல்லும் கூட்டம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

சுவாரசியம் என்னவென்றால்.?

ஆக்கமென்று ஒன்று இருப்பின், அழிவென்பதும் நிச்சயம் இருக்கும். ஆனால் சுவாரசியம் என்னவென்றால் இந்த இந்த காரணத்தினால் உலகம் அழியுமென்று நாம் அஞ்சு நடுங்கும் கொடூரமான விடயங்கள் நம்மை அழித்துவிடாது என்பதே.!

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

கவலை வேண்டாம் – கவலை தேவை.!

அப்படியாக உலகத்தின் அழிவை பற்றி நாம் கவலையேப்பட தேவையில்லாத விடயங்கள் என்னென்ன.? நிச்சயமான கவனத்தில் எடுத்துக்கொண்டு பீதியடைய வேண்டிய காரணிகள் என்னென்ன என்பதை பற்றிய சுருக்கமான தொகுப்பே இது.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

வேற்றுகிரகவாசிகள்

சினிமாக்களில் காட்சிப்படுத்துவது போல ஏலியன்கள் மிகவும் கொடூரமான உயிரினமாகத்தான் இருக்க வேண்டிய கட்டாயமில்லை; ஒரு நாய்க்குட்டிபோல நன்றிமிக்க அல்லது ஒரு பூனைக்குட்டி போல தான் உண்டு தன் வேலையுண்டு என்பது போன்றும் இருக்கலாம்.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

அப்போது ஒரு கேள்வி எழும்.!

அதெல்லாம் கிடையாது ஏலியன்கள் வெறிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான இனமாகத்தான் இருக்கும் என்றே வைத்துக்கொள்வோம். பூமியை அவைகள் ஆட்கொள்ளும்; அழிக்கும் என்றே வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு கேள்வி எழும் – பிரபஞ்சத்தில் உள்ள பிற லட்சக்கணக்கணக்கான கிரகங்களில் கிடைக்காததா பூமியில் கிடைத்து விடப்போகிறது. ஆக ஏலியன்கள் “குறிப்பிட்டு” பூமி மீது படையெடுத்து, நம்மையெல்லாம் அழித்தொன்றும் விடாது. வாய்ப்புகள் மிக மிக மிக குறைவு.!

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

ரோபோக்கள் & செயற்கை நுண்ணறிவு

இதுவும் திரைப்படங்கள் கிளப்பிய பீதியே.! ரோபாக்ககளால் நமது சமுதாயத்தையையும் நமது தொழிலாளர்களையும் குறிப்பிட்ட அளவில் மாற்றியமைக்க முடியுமே தவிர, ஒட்டுமொத்தமாக கட்டமைத்து விட இயலாது.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

மனிதர்கள் ஜித்தனுக்கு ஜித்தனாக உருமாறுவார்கள்.!

ஒருவேளை ரோபோக்கள் ஜித்தன்களாக மாறினால் மனிதர்கள் ஜித்தனுக்கு ஜித்தனாக உருமாறுவார்கள் என்பதில் ஐயம் வேண்டாம். இருப்பினும் ஏனோ புரியவில்லை, ரோபோக்கள் உலக அழிவின் முக்கிய காரணி என்ற சந்தேக பட்டியலில் எப்போதும் நீடிக்கிறது.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

சிறுகோள் / எரிகல் மோதல்

அடுத்தமுறை பூமியோடு எரிகல்/விண்கல் மோதல் சார்ந்த பீதிகள் கிளம்பினால் – தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படாத/ இல்லாத காலத்திலேயே துல்லியமான விண்வெளி நிகழ்வுகளை கணித்த மனித இனம், தற்போதைய அளப்பறியாத இயற்பியல் கொண்டு என்னவெல்லாம் சாதிக்கும் என்பதை ஒருமுறை நினைவேற்றிக்கொள்ளுங்கள்.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

பிரபஞ்சத்தின் பாரிய எழுச்சி.!

தற்கால அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிய அளவிலான கணிப்புகளை நிகழ்த்த முடியும். விண்வெளியில் விடயங்கள் எப்படி நடக்கிறது, பிரபஞ்சத்தின் பாரிய எழுச்சி போன்ற பல கணிப்புகள் இப்போது அத்துப்படி. அந்த அடிப்படையில், எதிர்காலத்தில் அழிவை ஏற்படுத்தும் சிறுகோள் மோதும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது தான் நிதர்சனம்.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

சோம்பீஸ்.!

மிகவும் வேகமான முறையில் பரவும் தோற்று நோயால் உலகம் அழியுமென்பதை நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் ஐ யம் வெரி சாரி. ஸோம்பீ மூலம் ஏற்படும் அழிவானது அது தொடங்குவதற்கு முன்பாகவே ஒடுக்கப்படும் என்பதே நிலைப்பாடு.!

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

ஆயுதமற்ற ஒரு எதிரிகளாவார்கள்.!

ஏனெனில் அவைகளின் (ஸோம்பீகள்) தாக்குதல் ஒரு ஆயுதமற்ற தாக்குதலாகும், அவைகள் (அவர்கள்) ஆயுதமற்ற ஒரு எதிரிகளாவார்கள். ஆக சோம்பீ தொற்று ஏற்பட்டால் அவைகளை எளிமையாக நம்மால் பரவ விடாமல் ஒடுக்க முடியும். திரைப்படங்களில் கூட முழுமையானதொரு அழிவை ஏற்படுத்தாத சோம்பீஸ் பற்றிய பீதிகள் தேவையில்லை.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

துருவ மாற்றம்

மண்ணியல் தலைகீழ் என்பது ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு நிகழ்வுதான். இதுபோன்ற நிகழ்வுகள் எம்மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்ற புதைபடிவ பதிவுகள் எதுவுமில்லை.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

இன்று வரையிலாக உயிருடன் தான் இருக்கின்றன.!

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான மண்ணியல் தலைகீழ் நிகழ்வுகளிலிருந்து பல பெரிய உயிரினங்கள் இன்று வரையிலாக உயிருடன் தான் இருக்கின்றன என்பதால், உலகத்தின் அழிவு துருவ மாற்றத்தின் கைகளில் இல்லை. சரி, அப்போது இந்த உலகம் எப்போது தான் அழியும்.? எதனால் அழியும் வாய்ப்புகள் அதிகம் என்று கேட்டால் – இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படும்.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

01. சூப்பர் எரிமலை வெடிப்புகள்

இதெல்லாம் ஒரு மேட்டரா என்று சிம்பிளாக எண்ணிவிட வேண்டாம். எரிமலை வெடிப்புகள் ஒரு நேரடியான அழிவை ஏற்படுத்தி விடாதென்பது ஒருபக்கமிருக்க கார்பன் டை ஆக்சைடு , சல்பர் மற்றும் சாம்பல் மூலம் வளிமண்டலத்தை பாதிக்கும், உலகத்தின் காலநிலையில் மாற்றங்களை உண்டாகும், உணவு சங்கிலியை உடைக்கும், அமில மழை பொழியும் – இப்படி மெல்ல மெல்ல பூமி கிரகத்தை ஒருவழி செய்துவிடும்.

which-apocalypse-scenario-is-the-most-likely-according-science-1

02. மூன்றாம் உலக யுத்தம்

இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வீர்கள், உலகத்தின் நிலைப்பாடும் அப்படிதான் இருக்கிறது. ஒருபக்கம் வடகொரியா – அது வெடிக்கும், இது சாம்பலாகுமென்று கூவுகிறது, மறுபக்கம் அமெரிக்கா எதற்கும் அசராமல் நிற்கிறது. எப்போது யார் எங்கிருந்து எதை தாக்கி அழிப்பார்கள், உலக யுத்தம் எப்போது வெடிக்கும் என்றே புரியாதொரு நிலைப்பாடு. ஆனால் ஒன்றுமட்டும் மிக உறுதி – மூன்றாம் உலகயுத்தம் அணுவாயுதம் இல்லாத ஒரு யுத்தமாக நிகழ்ந்து முடிக்க வாய்ப்பே இல்லை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *