ஒருமுறையல்ல, மொத்தம் 5 முறை தப்பித்துவிட்டோம்.! அடுத்த முறை.!?
தானாகவே (இயற்கையாகவே) உருவாக்கம் பெற்று, உயிர்களை உண்டாக்கி, வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த பூமி கிரகமானது தானாகவே அழிந்துபோகும் ஒரு நிலை – ஓவர் நைட்டில் அதாவது ஒரே நாள் இரவில் நடந்து விடாது. மிக மிக யதார்த்தமான முறையில் தான் நிகழும். ஆனால் மனித இனம் நினைத்தால் அந்த நிகழ்வை ஒரே நாள் இரவில் அல்ல; அதைவிட விரைவாக கூட நிகழ்த்திட முடியும்.
எந்தவொரு விடயத்தையும் கண்டறிய ஆய்வு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் சில ஆய்வுகள் மிகவும் விசித்திரமான, அதே சமயம் சற்று விபரீதமானதாகவும் இருக்கக்கூடும். அப்படியான ஆய்வுகள் விபரீதமென்று தெரிந்தே தான் பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்படுகின்றன என்பது தான் நிதர்சனமும் கூட.
விபரீதமான 5 பரிசோதனை.!
அப்படியாக, இன்னும் ‘கொஞ்சம்’ எல்லை மீறி இருந்தால் அல்லது மீறினால் உலகை அழிக்கும் சக்தியாக உருமாறி இருக்கும் (மனித இனம் நிகழ்த்திய) விபரீதமான 5 பரிசோதனைகளை தான் இங்கு காணவுள்ளோம்.
01. கோலா சூப்பர்டீப் போர்ஹோல்
பூமியின் மேலொடு (Earth’s crust ) வரை துளையிட ரஷ்யா முயற்சித்தது அது தான் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole). அப்படியாக இந்த பரிசோதனையில், பூமியில் சுமார் 40,000 அடி ஆழம் வரை துளையிடப்பட்டது. தற்போது வரை இந்த துளை தான் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மிக ஆழமான துளை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான புரிதல்.!
சூடான மாக்மா (Hot Magma) தாக்கத்தால் இதற்கு மேல் தோண்டுவது சாத்தியமே இல்லை என்ற நிலையில் தான் ஆய்வாளர்கள் துளையிடுவதை நிறுத்திக் கொண்டனர். இயற்கைக்கு மாறான அழுத்தங்களை வளிமண்டலத்தில் வெளியிடப்படும் செயல்பாடுகள் மேல் அதிகப்படியான புரிதல்களை பெறவே இந்த ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது.
02. ட்ரினிட்டி டெஸ்ட்
அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட உலகின் முதல் அணு சோதனை தான் ட்ரினிட்டி டெஸ்ட் (Trinity Test ) ஆகும். 1945-ஆம் ஆண்டு 16 ஜூலை அன்று அமெரிக்க ராணுவத்தால் இது நிகழ்த்தப்பட்டது.
மிக அரிது.!
இந்த ஆய்வின்படி அணு பிளப்பை வளிமண்டலத்தில் எரியூட்ட சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நிரூபித்தனர். இருப்பினும் அது மிக மிக அரிது என்று பின்னாளில் தெரிய வந்தது. இந்த பரிசோதனை ஒரு மாபெரும் வெடிப்பை நிகழ்த்தி, எதிர்பாராத அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
03. லார்ஜ் ஹாட்ரோன் கொல்லிடர்
லார்ஜ் ஹாட்ரோன் கொல்லிடர் (Large Hadron Collider) என்பது ஒரு மாபெரும் துகள் பெருவெடிப்பியந்திரம் (particle collider) ஆகும், மேலும் உலகிலேயே மிகப்பெரிய நிறுவல் (installation) இது தான்.
ஜெனீவா நகரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.!
சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அமைப்பான இது ஜெனீவா நகரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் துகள் இயற்பியல் (particle physics) சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றன, முக்கியமாக எதிர் துகள்கள் மோதலில் வெளிப்படும் கதிர்கள் சார்ந்த ஆய்வுகள்.
பிளாக் ஹோல் உருவாக்க வல்லது.!
சில விஞ்ஞானிகள் இந்த கொல்லிடர் பூமியை அழிவிற்க்குள் தள்ளும் பிளாக் ஹோல் போன்றவைகளை உருவாக்க வல்லது என்று அஞ்சுக்கின்றனர். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் பூமி கிரகம் இனம் புரியாத ஏதோ ஒரு விண்மீனுக்குள் (galaxy) உறிஞ்சிக்கொள்ளப்படும்.
04. ஸ்டார்பிஷ் ப்ரைம்
பூமியின் மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் அமெரிக்கவால் நிகாழ்த்ப்பட்ட வெப்பாற்றல் போர் ஆயுத (thermonuclear warhead) பரிசோதனை தான் ஸ்டார்பிஷ் ப்ரைம் (Starfish Prime). சுமார் 1.4 மெகா டன் வெடி பொருட்கள் ஏற்படுத்தும் விளைவை இந்த பரிசோதனை ஏற்படுத்தியது.
மின்காந்த துடிப்பு
இந்த வெடிப்பு ஏற்படுத்திய மின்காந்த துடிப்பு (Electromagnetic pulse) ஆனது பல தெரு விளக்குகளை அணைத்தது மட்டுமின்றி பல வகையான தொடர்புகளையும் (Communication systems) துண்டித்தது. இதுபோன்ற பரிசோதனைகளில் இருந்து வெளிவரும் வழக்கத்திற்கு மாறான கதிர்வீச்சு அளவு, பூமியை வசிப்பதற்கு தகாத இடமாக மாற்றும்.
05. எஸ்இடிஐ
எஸ்இடிஐ (SETI) என்பதின் விரிவாக்கம் ‘சர்ச் ஃபார் எக்ஸ்ட்ராடெரெஸ்ட்ரியல் இன்டெல்லிஜன்ஸ்’ என்பதாகும். அதாவது வேற்றுகிரக வாசிகளை தேடல். ஏலியன்கள் சார்ந்த பல ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டே இருந்தாலும், ஏலியன்கள் சார்ந்த தேடல் உலகின் முடிவை தேடுவதற்கு சமம் என்ற எதிர்ப்பு குரல்களும் மறுபக்கம் எழுந்துக் கொண்டே தான் இருக்கின்றது.