Site icon News – IndiaClicks

குற்றவாளிகளை பறந்து பறந்து பிடிக்கப்போகும் துபாய் போலீஸ் – பறக்கும் பைக் ரெடி

சினிமாவில் இப்போது வரை எதிர்காலத்தை காட்டியது உண்மைதான் போல, கற்பனைகளில் பறக்கும் ஆட்டோமொபைல்ஸ் இப்போது உண்மையென நம்ப வைத்துள்ளது. மேலும் துபாய் போலீசார் அந்த சினிமா கனவை யதார்த்தமாக மாற்றிவிட்டனர்.

பல நாடுகளில் போலீஸ் படைகளுக்கு சிறந்த வகன வசதிகள் மற்றும் வேகமான கார்களுக்காக போராடுகையில், துபாய் காவல்துறையில் அதன் அதிகாரிகளுக்கு பறக்கும் பைக்குகளை உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் இந்த பறக்கும் பைக் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது.

துபாய்:

வெளிநாட்டவர்கள் ஆடம்பரமாக இருக்க பயன்படும் துபாய் நாட்டில், ஏற்கனவே லம்போர்கினியின் ரோந்து கார்கள், ரோபோக்கள் மற்றும் ஆண்ட்ராய்டு அதிகாரிகள், இந்த வரிசையில் இப்போது புதியதாக பறக்கும் பைக்குகளை உருவாக்கி கொடுத்துள்ளது துபாய் அரசாங்கம்.

ஹேவ்சர்ஃப் :

துபாய் நாட்டில் பயன்படும் இந்த பறக்கும் பைக்குகளை ரஷ்ய தொழில்நுட்ப நிறுவனமான ஹேவ்சர்ஃப் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது,
அதன்பின் 64kmh-இல் பறக்கும் திறன் கொண்டது இந்த பறக்கும் பைக்.

ஹூவர்ஸர்ஃப்;

ஹூவர்ஸர்ஃப் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸாண்டர் அமானோவ் துபாய் போலீஸுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இந்த பறக்கும் பைக் அனைத்து வகையில் உதவியாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் பட்டியலில் சேர்த்து, ஸ்கார்பியன் பறக்கும் பைக் நகரின் தற்போதைய புவைநஒ தொழில்நுட்ப நிகழ்ச்சியில் துபாய் போலீஸ் சார்பாக வெளியிடப்பட்டது.