விரைவில் வருகிறது ஃபேஸ்புக் டிவி..!
சர்வதேச தொலைகாட்சிகளுக்கு போட்டியாக விரைவில் ஃபேஸ்புக் தொலைகாட்சியை வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது. பயனாளர்களை தன்வசப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்துள்ள ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஃபேஸ்புக் டிவியை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளது. வீடியோக்கள், விளம்பரங்கள் என பல நிகழ்வுகளை ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டு தொலைகாட்சிகளுக்கு மறைமுக போட்டியாக இருந்து வந்த பேஸ்புக் தற்போது தொலைகாட்சிகளுக்கு நேரடி போட்டியாக மாறவுள்ளது. ஃபேஸ்புக் டிவியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் டிவி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இதுவரை இளைஞர்களை கவர்ந்த ஃபேஸ்புக் தளம் தொலைக்காட்சியாக மின்னுமா என்பது அடுத்த மாதம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.