ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்க்கு புதிய 3 வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது.
உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. மேலும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த 3 புதிய வசதிகள் அனைவருக்கும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்:
மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும், இதனால் ஒருவர் ஐந்து சிம் கார்டுகளுக்கு மேல் வாங்க முடியாது என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தொலைதொடர்பு நிறுவனங்கள்:
இப்போது புதிய வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மேலும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா,வோடபோன் போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டிசம்பர்-1:
இப்போது ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கான புதிய நடைமுறைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி பதிவு:
ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் மூலம் வலைதளத்தில் வருமான வரி பதிவு மற்றும் ஆதாரில் உள்ள தகவல்களை எளிமையாக எடிட் செய்ய முடியும், இவ்வாறு செய்யும் போது நீங்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணிற்கு ஒடிபி அனுப்பப்படும். மேலும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆதார் எண்களை இணைக்க எளிமையான 3 வழிமுறைகளை பார்ப்போம்.
வழிமுறை-1:
முதல் வழிமுறை பொறுத்தவரை ஒடிபி எனப்படும் எஸ்.எம்.எஸ் மூலம் வரும் தற்காலிக குறயீட்டு எண் மூலம் இணைக்கலாம்.
வழிமுறை-2:
இரண்டாவது வழிமுறை பொறுத்தவரை மொபைல் அப்ளிகேஷன் மூலம் இணைக்க முடியும்.
வழிமுறை-3:
இரண்டாவது வழிமுறை பொறுத்தவரை ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் போன் அழைப்பில் குரல் பதிவின் வழிகாட்டலை பின்பற்றி இணைப்பது ஆகும்.