பிரபல யூசி பிரவுசர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் பிரவுசர், யூசி பிரவுசர், இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர், மாதந்தோறும் சுமார் 100 மில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்கள், யூசி பிரவுசர் தேடுபொறியை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
கூகுள்:
இந்த யூசி பிரவுசர் பொறுத்தவரை கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக செயல்பட்டு வந்தது. மேலும் உலகலவில் அதிக மக்கள் இந்த யூசி பிரவுசரை பயன்படுத்துகின்றனர்.
500 மில்லியன்:
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 500 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டதாக தற்சமயம் யூசி பிரவுசர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள்:
இப்போது வந்த தகவல்களின் அடிப்படையில் யூசி பிரவுசர் பயனர்களின் தகவல்களைச் சேகரித்து சீனாவில் உள்ள பல்வேறு சர்வர்களுக்கு அனுப்புவதாகச் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் எந்த அறிவிப்பின்றி ப்ளே ஸ்டோரில் இருந்து யூசி பிரவுசர் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
இந்தியாவில் யூசி பிரவுசர் தடை செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் யூசி பிரவுசரிடம் விளக்கம் கேட்டுள்ளது இந்தய அரசு.
யூசி நியூஸ்:
யூசி நியூஸ் குறுஞ்செயலியானது அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில், அதிக நபர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட குறுஞ்செயலி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
யூசி பிரவுசர் மினி :
அலிபாபாவின் சேய் நிறுவனமான யூசி பிரவுசர் மினி நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தவறான வழியில் செயல்பட்டதே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.