ஸ்மார்ட்போன்களில் உள்ள அப்ளிகேஷன்களில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் நிறுவனம் பொதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பயன்படும் இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலி பொறுத்தவரை அனைவருக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களில் இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை மிக அருமையாக பயன்படுத்த முடியும். இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தும் வழிமுறையை பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.
வழிமுறை-1:
கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அடுத்து பதிவிறக்கம் செய்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
வழிமுறை-3:
அதன்பின்பு கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை துவக்கி மேல் இடது பக்கத்தில் உள்ள மெனு பொத்தானை தட்டவும்,பின்பு செட்டிங்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4:
செட்டிங்ஸை கிளிக் செய்தபின்பு டேப் டு டிரான்ஸ்லேட் ( Tap to Translate)என்ற ஆப்ஷனை காண முடியும்.
வழிமுறை-5:
அதன்பின்னர் toggle button என்ற விருப்பத்தின் மூலம் கூகுள் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் பயன்படுத்தமுடியும்.