சாம்சங் நிறுவனம் 3 மாதத்தில் 37,230 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது!
புதிய iPhone மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கில் பெற்ற தோல்வி என பல சவால்களை எதிர் நோக்கிய சம்ஸங் எலெக்ட்ராநிக்ஸ் நிறுவனம் இந்த காலாண்டு லாபம் $7.3 பில்லியன் ($7,300,000,000) அமெரிக்க டாலர்கள் ( 37230,00,00,000 ரூபாய்கள்) அதாவது 85% அதிக லாபம்.
இது வணிக வல்லுநர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்ியுள்ளது. Galaxy மொபைல் போன் அதிக அளவில் விற்பனை ஆனது தான் இந்த அதிக லாபதிற்கு காரணம் என தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சம்ஸங் தெரிவித்துள்ளது.
முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வரும் Chips & Screens செய்து தருவதற்கான ஆர்டர் பெருமளவில் குறைந்த போதிலும் இந்த நிறுவனம் அசுர லாபம் பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தொடுத்த காப்புரிமை வழக்கில் தோல்வி அடைந்தவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1% விட குறைவாகவே விலை உயர்ந்தது.. ஆனால் சம்ஸங் நிறுவன பங்கு மதிப்பு 7.2% உயர்ந்தது.
ஒரு பில்லியன் டாலர் அபராததமாக கட்டிய பின் சம்ஸங் இந்த லாப விகிதத்தை அடைந்துள்ளது. இதன் மிக முக்கிய காரணம் பல வித இயக்கு தளங்களிலும் தனது கைபேசிகளை சம்ஸங் விற்கிறது.
தெற்கு மற்றும் கிழக்காசிய சந்தையில் சம்ஸங் மட்டுமே உள்ளது.