5ஜி வேகத்துக்கு இணையாக செயல்படும் புதிய சாம்சங் மோடம்
தென் கொரிய மின்னணுவியல் நிறுவனமான சாம்சங், தனது புதிய வெளியீடாக சாம்சங் 5ஜிவேகத்துக்கு இணையான வேகத்தில் செயல்படும் மோடம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையம் துரித வேகத்தில் உள்ளதையே இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களை கவரும் நோக்கத்தில் 5ஜி இணைய தொழில்நுட்பம் தற்போது பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அதிவேகத்தில் டேட்டாக்களை தரவிறக்கம் செய்யக்கூடிய எக்ஸினோஸ் 9 எனும் LTE மோடம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 1.2 Gbps எனும் வேகத்தில் டேட்டாக்களை தரவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே 1 Gbps எனும் தரவிறக்க வேகம் உள்ள நிலையில் தற்போது 20 சதவீதம் இணைய வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பமும் 5ஜி இணையத் தொழில்நுட்பத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. எக்ஸினோஸ் மோடத்தில் ஃபைபர் உள்கட்டமைப்பு மூலம் இணைய வேகத்தை அதிகரித்துள்ளனர்.