ஜியோ VS ஏர்டெல் : ஒருபக்கம் ரூ.399/- மற்றும் ரூ.309/- மறுபக்கம் ரூ.349; எது பெஸ்ட்.?

ரிலையன்ஸ் ஜியோ, சமீபத்தில் அதன் கட்டணங்களை மற்றும் தரவுத் திட்டங்களை சீரமைத்தது, அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கவர்ச்சிகரமான திட்டங்களை தொகுத்து வழங்குகிறது. சிறிய அளவிலான எதிர்ப்புகள் கிளம்பினாலும் பெரும்பாலான ஜியோ வாசிகள் புதிய திட்டங்களை வரவேற்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலைப்பாட்டில் ஜியோவின் போட்டி நிறுவனங்கள், ஜியோவின் ஆக்கிரமிப்பு திட்டங்களுக்குள் தங்கள் வாடிக்கையாளர்கள் சிக்கிவிடக் கூடாதென்பதற்காக ஜியோ பாணியிலான மற்றும் ஜியோவின் நன்மைகள் மற்றும் விலை நிர்ணயத்தை போன்ற ரீசார்ஜ் தொகுப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன, குறிப்பாக ஏர்டெல் நிறுவனம்.!

 

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில்.!

அப்படியாக புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்களை, ஏர்டெல் தொகுத்து வழங்கும் புதிய திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்த்து – கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும் இரண்டு நிறுவனங்களின் திட்டங்களில் எது சிறப்பானது.? எது அதிக நன்மைகளை வழங்குகிறது.? என்பதை ஆராயும் கட்டுரையே இது.

மொத்தம் 70 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

இங்கு ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 399/- மற்றும் ரூ.309/- ரீசார்ஜ் திட்டங்களையும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- ரீசார்ஜ் திட்டத்தையும் ஒப்பீடு செய்யவுள்ளோம். ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் பேக் ஆனது மொத்தம் 70 நாட்கள் செல்லுபடியாகும். இதன் நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு கிடைக்கும். அதாவது மொத்தம் 70 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது.

ஜியோவின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி.!

ஜியோவின் பிற ப்ரீபெய்ட் பொதிகளைப் போலவே, (ஜியோவின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி) தினசரி வரம்பான 1ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர் இணையத்தின் வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.309/- திட்டம்.!

மறுகையில் உள்ள ஜியோவின் ரூ.309/- திட்டமானது மொத்தம் 49 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டமும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. முந்தைய ரீசார்ஜ் திட்டத்தை போலவே, வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெறக்கூடிய அதிகபட்ச தரவு 49ஜிபி ஆகும். உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் பெறலாம். ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 28 ஜிபி அளவிலான தரவை வழங்கும். இதனுடன் சேர்ந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நன்மைகளையும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள்.!

எந்தவொரு கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு வாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள் அழைப்பு நன்மை வழங்கப்படும் அந்த வரம்பு தீர்ந்துவிட்டால், ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசாக்கள் மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்

இலவச அழைப்புகளின் மீதான வரம்பு.!

இதேபோல இந்த திட்டத்தின் இலவச அழைப்புகளின் மீதான வரம்பு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே என்பதும் அந்த வரம்பு முடிந்த பின்னர் நிமிடத்திற்கு 10 பைசாவும், நிமிடத்திற்கு 30 பைசாவும் முறையே ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கும் வசூலிக்கப்படும்.

எது பெஸ்ட்.?

இந்த மூன்று ரீசார்ஜ் பொதிகளின் நன்மைகளை பற்றி அறிந்துக்கொண்ட பின்னர் உங்களுக்கே ஒரு தீர்க்கமான முடிவு தெரிந்திருக்கும். நன்மைகள் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தல் ஜியோவின் திட்டங்கள் தான் முதன்மை பெறுகின்றன.

பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம்.!

இதனோடு ஒற்றுப்போக விரும்பாதவர்கள் எது வேகமான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்கிறது மற்றும் எது எளிமையான சேவையை வழங்குகிறது என்பதை வைத்து ரீசார்ஜ் பொதிகளை தேர்தெடுத்துக்கொள்ளலாம். ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்து டெலிகாம் சேவைகளின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம் சார்ந்த அப்டேட் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தோடு இணைந்திருக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *